கல்முனை மஹ்மூத் பெண்கள் பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பீடத்தில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றுவரும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீனின் 2வது புதல்வி இஸ்ஸதீன் மரிஹா ஆலியா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனான தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்வொன்றிற்காக கிழக்கு மாகாணம் சார்பாக பங்குபற்றி பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.
டிஜிட்டல் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கு மாணவர்களை மேம்படுத்த நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
பல்லின மக்களைக் கொண்ட எமது நாட்டில் மாணவர்களுக்கிடையிலான தொடர்பாடல் மேம்படுத்துவதன் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மேம்படுத்த முடியுமானால் உங்கள் அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன?
முஸ்லிம் பெண் மாணவிகள் சாதாரண தரம் பயின்றதற்குப் பின்னர் தனது கல்வியைத் தொடர தனியான பெண்கள் பாடசாலையை விரும்புகின்றனர். இதற்காக உங்களது அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன?
என்ற கேள்விகளைத் கேட்டதற்கு, தன்னால் முடியுமான உதவிகளைச் செய்வதாகவும், தனது அரசாங்கம் முடியுமான உதவிகளைச் செய்யும் என்றும் இம்முறை 21 பில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதிலளித்தார்.
0 comments :
Post a Comment