சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கமு/கமு/மழ்ஹருல் ஷம்ஸ் மகா வித்தியாலயம் மற்றும் கமு/கமு/ எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான ரமழான் கால சிறப்பு நிகழ்ச்சி குறித்த பாடசாலைகளில் இன்று (04) இடம்பெற்றது.
"அழகான குடும்பமும் சிறந்த பிள்ளை வளர்ப்பும்" எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் பெற்றோர்கள், குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான கருத்துகளைப் பெற்றதுடன் குடும்பப் பிணைப்பு, சிறந்த பெற்றோராக விளங்கும் வழிகள், குழந்தைகளின் போசாக்கு , கல்வி, பாதுகாப்பு மற்றும் நற்பண்புகளை ஊக்குவிக்கும் முறைகள் பற்றிய பயனுள்ள விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முஆபிக்கா, கல்முனை கல்வி வலய அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாது ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment