சர்வதேச நாசகார சக்திகளினதும், தேசிய இனவாத சக்திகளினதும் துன்பங்களிலிருந்து முஸ்லிங்கள் மீட்சி பெற நோன்புப்பெருநாள் தினத்தில் பிராத்திப்போம் : அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர்



ர்வதேச நாசகார சக்திகளினதும், தேசிய இனவாத சக்திகளினதும் துன்பங்களிலிருந்து முஸ்லிங்கள் மீட்சி பெற நோன்புப் பெருநாள் தினத்தில் பிராத்திப்போம் : அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர்

சர்வதேச நாசகார சக்திகளினதும், தேசிய இனவாத சக்திகளினதும் துன்பங்களிலிருந்து முஸ்லிம் சமூகம் மீட்சி பெற தியாக மாதத்தை கடந்து நிறைந்த அமல்களால் அலங்கரிக்கப்பட்ட நோன்புப் பெருநாள் தினத்தில் பிராத்திப்போம் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளரும், எஸ்.எல்.டி.பி பிரச்சார செயலாளருமான கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில் மேலும், பலஸ்தீன மண்ணுக்கும், காஷ்மீர் மண்ணுக்கும் இன்னும் பல இஸ்லாமிய தேசங்களுக்கும் பல தசாப்தங்களாக இழைக்கப்படும் அநீதிகளை சர்வதேசம் கண்டுகொள்ளாமல் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் அந்த அநீதிகளுக்கு நியாயம் கேட்பவர்களின் குரல்களையும் நசுக்கும் எமது நாட்டின் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை மக்கள் இந்த நோன்புப்பெருநாளை கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

முஸ்லிங்களின் பலமான கேடயமாக நோக்கப்படும் துஆக்களை நாம் இந்த காலகட்டங்களில் அதிகரிக்க வேண்டியுள்ளது. சர்வதேச அளவிலும், தேசிய ரீதியாகவும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ இறைவனை பிராத்திப்போம். இந்த பெருநாள் தினத்தில் காஸா அடங்களாக பல்வேறு பிரதேசங்களிலும் பாதிக்கப்படும் முஸ்லிம்களை எண்ணி இலங்கை முஸ்லிம்களுக்கு மனதளவில் நிம்மதியான பெருநாளாக இல்லை என்பதே உண்மை. எல்லாம் வல்ல இறைவனின் துணைகொண்டு நாட்டு மக்கள் எல்லோரும் நிம்மதியாக, சுபிட்சமாக வாழவும், நாடும் செழிப்பாக அமையவும் பிராத்திப்போம். எல்லோருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :