அரசின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு கைகொடுப்போம். ஐக்கிய மக்கள் காங்கிரஸின் செயலாளர் யஹ்யாகான் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தி!



நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்த்துக்கொண்டு இராது; அரசின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கவும் முஸ்லிம் சமூகம் தனது பாதுகாப்பையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கும் தூய சிந்தனையுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க இன்றைய ஈகைத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என ஐக்கிய மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சமூக சிந்தனையாளருமான அல் ஹாஜ் ஏ.சி. யஹ்யாகான் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

இன்றைய அரசியல்வாதிகளில் சிலர் நாங்கள் எதிர்க்கட்சிகளில் இருக்கின்றோம் என்பதற்காக அரசு முன்வைக்கும் அனைத்துத் திட்டங்களையும் எதிர்த்துக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறான நிலை மாறவேண்டும். அத்துடன் "முஸ்லிம் சமூகத்தின் மீதான பேரினவாத கெடுபிடிகள் இன்னும் முற்றுப் பெறாமல் அங்கும் இங்குமாக தலைவிரித்தாடுகின்ற சூழ்நிலையில் சுயநலமற்ற, தூரநோக்கு சிந்தனையுடைய மாற்று அரசியல் சக்தியின் தேவை உணரப்படுவதனால் அத்தகைய சக்தியொன்றை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எல்லோரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

தமது சுகபோகங்களுக்காக சமூகத்தை ஏமாற்றி வருகின்ற சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் தம்மை விடுவித்துக் கொள்ளாத வரையில் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் தனது அபிலாஷைகளை அடைந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளிவாசல்கள் மற்றும் சமய, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், கல்வி, பொருளாதார துறைகளுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் உடைத்தெறியப்பட வேண்டும், என்பதுடன் பொதுவாக இந்நாட்டு முஸ்லிம்கள் தமது தாய் மண்ணில் அனைத்து உரிமைகளுடனும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

ரமழான் மாதம் நமக்கு கற்றுத்தந்த படிப்பினைகள், சமூகம் வேண்டி நிற்கின்ற இத்தகைய சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க உறுதுணையாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்" என்று ஏ.சி. யஹ்யாகான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :