தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் உள்ள பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தைகளூடாக தீர்வுகளைப் பெறவுள்ளோம்.-உதுமாலெப்பை MP



கே எ ஹமீட்-

வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. பிரச்சினைகள் தொடர்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தீர்வுகளைப் பெறவுள்ளோம். என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

டந்த 30 வருட காலமாக வட - கிழக்கில் நடைபெற்ற கொடூர யுத்தத்தில்
வட- கிழக்கில் வாழ்ந்து வந்த மூவின மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாரிய பிரச்சினைகளையும் எதிர் நோக்கினர். தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தமிழ்- முஸ்லிம் மதத்தவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண உள்ளோம் என பொது நிருவாக மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் மீதான குழுநிலை பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்….

கடந்த 30 வருட கால கொடூர யுத்த காலத்தில் சுதந்திரமாக பேசுவதற்கு உரிமை இல்லாதவர்களாக இருந்தோம். நாய்களை சுடுவது போன்று மனிதர்களை படுகொலை செய்தார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது. ஆகவே பாராளுமன்றத்தில் நான் ஒரு வீரனாக பேசுகிறேன் என்பதற்காக நீங்கள் எனது முஸ்லிம் சமூகத்திற்கு உதவி புரிய வேண்டாம்.

வட- கிழக்கில் வாழும் மூவின மக்களின் பிரச்சினைகளுக்காக சமூகங்களின் மக்கள் பிரதிநிதிகளையும், புத்திஜீவிகளையும் அழைத்து பேச்சு வார்த்தைகளின் ஊடாக தீர்வு காண்பது எமது குறிக்கோளாகும். தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இனவாதம் பேசுவதை நாங்கள் வன்மையாக எச்சரிக்கிறோம்.
மேலும் உரையாற்றுகையில்

மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதனால் மத்திய அரசாங்கம், பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு அப்பால் நமது மக்களுக்கு பணி செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தும் செயற்பாடுகள் மாகாண சபைகளிடம் இருந்து வந்தன. இச்செயற்பாடுகள் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்ததால் பல ஆண்டு காலமாக மாகாண சபை தேர்தல்கள் நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விரைவில் மாகாண சபைகளின் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மாகாண சபைகள் அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்பட வேண்டும் என்ற சாய்ந்தமருது பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கை தொடர்ந்தும் ஏமாற்றப்படும் நிலை காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் கல்முனை சாந்தால் கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படும் என தெரிவித்தார்.

5 வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு உள்நாட்டலுவல்கள் பொது நிருவாக அமைச்சர் திரு ஜனக பண்டார தென்னங்கோன் அவர்களால் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான நகர சபை வர்தமானியில் வெளியிடப்பட்டது. அண்ணன் வழங்கிய அனுமதியை தம்பி ரத்து செய்தார். எனவே சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று சாய்ந்தமருது நகர சபை தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியை அமுல்படுத்தி சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கான தனியான நகர சபையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை,சாய்ந்தமருது, காரைதீவு ,நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று,பொத்துவில் ஆகிய பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைக் குழு கூட்டங்கள் நடைபெறுகின்றன.

பொது நிருவாக அமைச்சின் சுற்று நிரூபத்தின்படி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் 2 1/2 மணித்தியாலங்களில் நடாத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி பிரதேசங்களில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைக் குழு கூட்டங்கள் 5 மணித்தியாலங்கள், 6 மணித்தியாலங்கள் நடைபெற்றது. இதனால் மக்கள் பிரதிநிதிகளும் திணைக்களத் தலைவர்களும் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய அமைப்பின் தலைவர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.எனவே பொது நிருவாக அமைச்சு இது தொடர்பான சுற்று நிரூபத்தினை அமுல்படுத்த வேண்டும்.
அது மாத்திரமின்றி ஒவ்வொரு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 10 பேரை அழைத்து வருகின்றார் அவர் ஒரு மணித்தியாலம் பிரதேச ஒருங்கிணை குழுக் கூட்டங்களில் பேசுகின்றார். அவர் அழைத்து வந்த 10 பேரும் அவர் பேசும்போது கை அடித்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இச்செயற்பாடானது பொது நிருவாக அமைச்சின் செயற்பாடுகளுக்கும், ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

புதிய சுற்று நிரூபத்தினை உருவாக்கி சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதேச ஒருங்கிணைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள 10 பேருக்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த விடயத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் நான் ஜனாதிபதியிடம் முறையிடுவேன் என தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :