கண்டியில் Top 100 விருது பெற்ற காரைதீவு கிருபாஞ்சனா கேதீஸ்.



வி.ரி. சகாதேவராஜா-
ண்டியில் இடம்பெற்ற Top 100 விருது வழங்கும் விழாவில் காரைதீவைச் சேர்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி கிருபாஞ்சனா கேதீஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டுடனும் தினகரன் பத்திரிகையின் அனுசரனையுடனும் கண்டியில் இடம் பெற்ற Top 100 எனும் விருது வழங்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.

காரைதீவை சேர்ந்த திருமதி. கிருபாஞ்சனா கேதீஸ் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக, சிரேஷ்ட விரிவுரையாளராவார்.

அந்நிகழ்ச்சியில் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என 100 பிரபலங்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்விற்கு மத்திய மாகாண முன்னாள் முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது கடந்த 15 ஆம் திகதி கண்டி சம்பத் மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :