USF Sri Lanka அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு!



USF Sri Lanka சமூக சேவை அமைப்பின் 2025 ஆண்டுக்கான வருடாந்த இப்தார் நிகழ்வு அமைப்பின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர் சேவை அதிகரியுமான அ. கபூர் அன்வர் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர்பயிற்சி நிலையத்தில் நேற்று சசனிக்கிழமை கிழமை (22) மிக விமரிசையாக நடைபெற்றது.

இடம் பெற்ற இப்தார் இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி எம். ஐ. சஹ்பி ( ஹாமி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இதன்போது, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் எந்திரி எம்.எம்.எம். முனாஸ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், சாயந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் பொறுப்பதிகாரி, அரச உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், USF Sri Lanka அமைப்பின் ஆலோசகர்கள், USF Sri Lanka அமைப்பின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் , USF Sri Lanka அமைப்பின் செயற்பாட்டாளர்கள் , இளைஞர்கள் முக்கியஸ்தர்கள் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.













எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :