மாவடிப்பள்ளி பாலத்தடியில் ஏற்பட்ட சிறு விபத்து-1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகன நெரிசல்



பாறுக் ஷிஹான்-
மாவடிப்பள்ளி பாலத்தடியில் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை(1) இரவு இச்சம்பவம் இடம்பெற்றதுடன் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலம் உள்ள பகுதியில் நேருக்கு நேர் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நெருக்குண்டு விபத்திற்குள்ளாகின.

இதனால் குறித்த பாலத்தில் இரு வாகனங்களும் சிக்கிக்கொண்டதுடன் அம்பாறையில் இருந்து கல்முனை அக்கரைப்பற்று நோக்கி சென்ற வாகனங்களும் கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் இருந்து அம்பாறை நோக்கி மாவடிப்பள்ளி ஊடாக செல்ல முற்பட்ட சகல வாகனங்களும் இச்சம்பவத்தினால் போக்குவரத்து செய்ய முடியாமல் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தரித்து நின்றன.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைதீவு பொலிஸார் உள்ளிட்ட உரிய அதிகாரிகள் குறித்த விடயங்களை சீராக்கியதுடன் தொடர்ந்தும் குறித்த பாலத்தின் ஊடாக ஏனைய வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டதனை அவதானிக்க முடிந்தது.

சுமார் பல ஆண்டு காலமாக மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலமானது காணப்படுவதுடன் தற்போது உடைந்து சிதைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :