கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை மே 1 இல் ஆரம்பம்! தலைவர் ஜெயா வேல்சாமி அறிவிப்பு



வி.ரி. சகாதேவராஜா-
திர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 01 ஆம் தேதி ஆரம்பமாகிறது என பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

முன்னர் கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26/07/2025 ம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 10 ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற இருந்தது.

தற்போது திகதி மாற்றத்தையடுத்து 2025 கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஜூன் 26ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு யூலை 10ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது என அறியப்படுகிறது.

யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59 நாள் பாதயாத்திரை யூ ன் மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும்.

அதற்கான முன் ஏற்பாடு ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப் புனித பாதயாத்திரைக் குழுவில் பக்திபூர்வமான முறையில் பங்குபெறவிரும்பும் அடியவர்கள் 0778386381 0763084791
ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :