உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025 சம்மாந்துறையில் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரப் பணிகள் முன்னெடுப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ம்மாந்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரப் பணிகள்  (27) நேற்று ஞாயிற்றுக்கிழமை  முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில், சம்மாந்துறை வளத்தாப்பிட்டி வட்டாரக் கூட்டம் வட்டார வேட்பாளர் சாந்தகுமார் தலைமையிலும் மஜீட்புரம் வட்டார பொதுக்கூட்டம் மஜீட்புரம் வட்டார பட்டியல் வேட்பாளர் இர்ஷாட் தலைமையிலும் மல்கம்பிட்டி வட்டார பெண்கள் சந்திப்பு வட்டார வேட்பாளர் ஹினாயதுல்லாஹ் தலைமையிலும் மட்டக்களப்பு தரவை வட்டார பெண்கள் சந்திப்பு வட்டார வேட்பாளர் சாஜித் தலைமையிலும் சம்மாந்துறை மத்தி வட்டாரப் பொதுக்கூட்டம் வட்டார வேட்பாளர் முபீஸ் தலைமையிலும் இடம்பெற்றன.

இந் நிகழ்வுகளில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, காத்திரமான கருத்துக்களை முன் வைத்தார்.
தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :