துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது!



பாறுக் ஷிஹான்-
சொட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் இல்லாத 'பொரதொளகாய் சொட் கண்' வகையைச் சேர்ந்த துப்பாக்கியும் ரி 56 வகை துப்பாக்கியின் 10 ரவைகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மலையடிக்கிராமம் 04 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய சந்தேக நபர் ஓய்வு பெற்ற முன்னர் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஆவார்.

மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவின் பணிப்புரைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் அறிவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸாரினால் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :