யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் பிரான்சிற்கு விஜயம்!



லக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தலைப்பில் சர்வதேச நிபுணத்துவ மாநாட்டின் உயர் மட்டப் பிரிவில் பங்கேற்பதற்காக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்ஸ் தலைநகர் பெரிசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஏப்ரல் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay அவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இலங்கையுடன் இணைந்து யுனெஸ்கோ அமைப்பு இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. யுனெஸ்கோவில் உலக பாரம்பரிய மரபுரிமை சொத்தாக கருதப்படும் கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அனுராதபுரத்தை பாதுகாப்பதற்கான நிலையான உத்திகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கென சர்வதேசத்தின் முன்னணி நிபுணர்களை இணைக்கும் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வத்தைக் கொண்டுள்ள பிரிவுகள் தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஊடகப் பிரிவு

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :