தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்குமிடையே கலந்துரையாடல்



AIT எனப்படும் தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவனம்  (Asian Institute of Technology)  மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் (SEUSL) ஆகியவற்றுக்கு இடையேயான  பயனுள்ள வட்டமேசை கலந்துரையாடல், தென்கிழக்கு பல்கலைக்கழககத்தின்  உபவேந்தர்  அலுவலகத்தில் கடந்த2025 .04.10ஆம் திகதி இடம்பெற்றது.

தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் ஏ.ஆர்.எவ். ஷபானாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  பதில் உபவேந்தர் கலாநிதி  அப்துல் மஜீத் தலைமை வகித்தார். இங்கு   AIT ஐ பிரதிநிதித்துவப்படுத்தி AIT இன் School of Environment, Resources and Development, பீடாதிபதி, பேராசிரியர் பி. அப்துல் சலாம் கலந்து கொண்டார்

நிகழ்வில்  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சார்பாககலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா  பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலிம், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி எம்.எச். ஹரூன், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட பீடாதிபதி அஷ்செய்க் எம்.எச்.ஏ. முனாஸ்,   நூலகர் எம்.எம். றிஃபாயுதீன் மற்றும்  Director, RIC கலாநிதி எம்.எம்.எம். முனீப்  ஆகியோர் கலந்து கொண்டனர். 

இரு நிறுவனங்களும் பரஸ்பர கல்வி வளர்ச்சிக்கான வழிகளை ஆராய்வதற்கான ஒரு முக்கிய தளமாக இக்கலந்துயாடல் அமையப்பெற்றது. முக்கிய விவாதப் பகுதிகளில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு, மாணவர் பரிமாற்ற திட்டங்கள், கூட்டு பட்டப்படிப்பு முயற்சிகள் மற்றும் ஆசிரிய மேம்பாட்டு வாய்ப்புகள் ஆகியவை அடங்கும்.

AIT மற்றும் SEUSL இரண்டும் நீண்டகால கல்வி கூட்டாண்மைகளை உருவாக்குவதில் வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தின, அவை மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புதுமை, உலகளாவிய வெளிப்பாடு மற்றும் வளமான கற்றல் அனுபவங்களை வளர்க்கும் என நம்பப்படுகிறது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :