உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் வறுமை ஒழிக்கப்பட்டு நாடு அபிவிருத்தியை நோக்கி நகரும்....




சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தெரிவிப்பு!


சர்ஜுன் லாபீர்-

உள்ளூர் உற்பத்தியாளர்களையும் அவர்களின் உற்பத்திப் பொருட்களையும் ஊக்குவித்தல் மற்றும் சந்தைவாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் நாட்டின் வறுமை இல்லாதொழிக்கப்பட்டு நாடு அபிவிருத்தி அடையும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தெரிவித்தார்.

அண்மையில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சமுர்த்தி அபிமானி" வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் மற்றும் சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது அந் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றும் போதே மேற்கூறியவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்..

ஒவ்வொரு முஸ்லிம்,தமிழ் பண்டிகைகளையும் சிறப்பிக்கும் முகமாக இவ்வாறான சந்தைகளைக் கொண்டு ஆரம்பம் செய்வது வழமையான விடயமாகும்.

இச் சந்தையில் எமது உள்ளூர் உற்பத்திகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளோம். அவ் உள்ளூர் உற்பத்திகளை ஊக்கிவிப்பதற்கான வாய்பாக இதனை அமைத்திருக்கின்றோம். அதனடிப்படையில் நாம் வாடிக்கையாளர்கள் எனும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அதுபோல் இவ் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்தி உற்பத்தி திறன்மிக்கதாக்குவதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்
குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் மூலமாக இவர்களை பரீசீலனை செய்து அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி இருக்கின்றோம்.

சமூர்த்தி திட்டம் மட்டுமன்றி உற்பத்தி திறன் சார்ந்த கைத்தொழில் மற்றும் ஏனைய துறைசார்ந்த உத்தியோகத்தர்களையும் இதில் இணைத்து அவர்களை மேற்பார்வை செய்து இவ் உற்பத்தியாளர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளும் வழங்கி இருக்கின்றார்கள்.

இவ்வாறு அவர்களின் உற்பத்திகளை மேம்படுத்த கூடிய சகல செயற்பாடுகளையும் எமது காரியாலயத்தின் ஊடாகவும் ஏனைய நிறுவனங்களின் ஊடாகவும் அறிவுறுத்தல்களை வழங்கி சிறப்பாக செய்து இருக்கின்றோம்.

எனவே எமது மக்களுக்காக உற்பத்தி செய்யபட்ட இப் பொருட்களை நாங்கள் கொள்வனவு செய்வதன் ஊடாக அவர்களை ஊக்குவிக்க முடியும். என்பதோடு அவர்களை விளம்பரம் செய்து நிரந்தர சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கலாம் என்பதனையும் தெரிவித்து கொள்கின்றேன்.

இங்கு வருகை தந்திருக்கின்ற சமூகமட்ட அமைப்புகளின் தலைவர்கள் இவ் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து அவர்களின் தொழில்சார் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வர வேண்டும்.

இதற்கு மேலதிகமாக இந் நிகழ்வில் சிப்தொர புலமைப்பரிசில் பெறுவதற்கு மாணவர்கள் கலந்து கொண்டு இருக்கின்ர்கள். சமூர்த்தி திணைக்களமானது வறுமை ஒழிப்பு என்கின்ற விடயத்தை மையப்படுத்தி பல்வேறுபட்ட செயற்திட்டங்களை பல வருடங்களாக முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றது.

இன்று நாம் வறுமை என்று பேசிக் கொள்கின்றோம் அதன் மூலமாகத்தான் பொருளாதார சிக்கல்கள் சமூகத்திலே எழுகின்றன. சில பிறழ்வான நடத்தைகள் மேலோங்குகின்றன.குற்றத்தை செய்கின்ற மனப்பாங்கு அதிகரிக்கின்றது.சட்டங்களுக்கு கட்டுப்படாத சமூகம் என்றெல்லாம் நாங்கள் வறுமைய காரணமாக காட்டி அதன் விளைவுகளாக பேசிக்கொள்கின்றோம்..
எனவே நாம் வறுமையில் இருந்து மீள்வதாக இருந்தால் அதற்கான ஒரேயொரு வழி கல்வியை மட்டும் குறிப்பிட முடியும். கல்வி மேம்பாட்டின் மூலமாக வறுமையை நிரந்தரமாக நீக்க முடியும்.

வேறு செயற்பாடுகளும், அபிவிருத்திகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தாக்கு பிடிக்குமே ஒழிய கல்வியை போன்று நீடித்து நிலைத்து நிற்க முடியாது.

கல்வி என்பது நாம் எல்லோரும் குறிப்பிடுவது போல வறுமை என்கின்ற இருளை அகற்றுகின்ற ஒளி ஆகும். சூரியன் உதிக்கின்ற போது எவ்வாறு இருள் மெல்லமெல்ல விலகுகின்றதோ அது போல கல்வி மேம்படுகின்ற போது குறித்த சமூகத்தில், பிராந்தியத்தில், நாட்டில் இருந்து வறுமையானது ஒழிந்துபோய் நாடு அபிவிருத்தி அடையும் என குறிப்பிட்டு இருந்தார்.

இவ் சமூர்த்தி திட்டத்தின் ஊடாக அதனுடைய பயனாளர்கள் சேமித்த பணத்தினைக் கொண்டு அவர்களின் உண்டியல் மூலமான பணங்களில் இருந்து தான் இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.உங்களைப் போல பல மாணவர்கள் இந்த புலமைப்பரிசில்களுக்காக ஏங்கிக் கொண்டு இருந்தாலும் நீங்கள் அதிர்ஸ்டசாலிகளாக தெரிவு செய்யப்பட்டு இருகின்றீர்கள்.எனவே இவ்வாறான மக்களின் பணத்தில் இருந்து எதற்காக வழங்கப்படுகின்றது என்று சிந்தித்து உங்களை வளப்படுத்தி எதிர்காலத்தை வெற்றி கொள்ளக்கூடிய சமூகத்திற்கு தலைவர்களாக கூடிய ஆளுமைகளை மாற்றுவதற்காக வேண்டித்தான் இவ்வாறான புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

எனவே மாணவர்கள் நன்றாக கல்வி கற்று வெற்றிகரமான அடைவை அடையக்கூடியவர்களாக மாறவேண்டும்.
கல்வி என்பதன் ஊடாக பரீட்சையில் சித்தியடைவது மாத்திரமல்லாது ஆளுமை விருத்தி ,ஒழுக்க விழுமியங்கள் ,சவால்களை எதிர்கொள்ள கூடிய திறன் அபிவிருத்தி என்கின்ற விடயங்களை எல்லாம் உள்வாங்கியதாக எமது கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எ.பி.எம் ஹுசைன்,கிராம நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம் நளீர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றுதெரிவித்தார். என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :