ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மதீனாவுக்கான இணைப்பாளராக 1989ம் ஆண்டு மறைந்த தலைவர் அஷ்ரபினால் முபாறக் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டார்.
அது முதல் அக்கட்சியை அரபு நாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
அத்துடன் "முஸ்லிம் காங்கிரஸ்" என்ற பத்திரிகையை அம்மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி அதற்கு கணிசமான சந்தாக்களை சேர்த்துக்கொடுத்தார்.
அந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு தலைமை காரியாலயம் வாடகை கட்டிடத்தில் இயங்கியதாலும் அங்கு பணி புரிவோருக்கு சம்பளம் கொடுக்கவும் கஷ்டமாக உள்ளது என்ற தலைவரின் கூற்று காரணமாக சவூதியில் உள்ள முஸ்லிம்களிடையே பாரிய நிதித்தேடலை முபாறக் அப்துல் மஜீத் மௌலவி முயற்சித்தார். அதன் பலனாக பல லட்சம் நிதி சேகரித்து கட்சிக்கு அனுப்பினார்.
இவ்வாறு இருக்கும் நிலையில் 1990ம் ஆண்டு அஷ்ரப் ஆதரித்து ஜனாதிபதியான, ஆர். பிரேமதாசாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டு முழு கிழக்கு மாகாண நிர்வாகத்தையும் புலிகளிடம் ஒப்படைத்தார். பிரேமதாச. புலிகள் தாம் விரும்பியவாறு செயற்படவும் விரும்பியவர்களை கைது செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. புலிகளின் விடயத்தில் பொலிசாரோ, இராணுவமோ தலையிடக்கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது.
இத்தனைக்கும் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய தீர்க்கமான வாக்குகளை கிழக்கு முஸ்லிம்களிடம் பெற்றுக்கொடுத்தது முஸ்லிம் காங்கிரசே. அக்கட்சி ஜனதிபதியின் பங்காளி கட்சியாக, அஷ்ரபின் ஆலோசனைபடி நடக்கும் பிரேமதாசவின் துணையாக இருந்தது. இந்த நிலையில் கல்முனையில் பாரிய முகாம் அமைத்திருந்த புலிகள் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யத்தொடங்கினர். இதனை அஷ்ரப் வெளிப்படையாக கண்டித்து அரசியல் செய்தாரே தவிர தனது அபிமானத்துக்குரிய பிரேமதாசவை அணுகி இதனைக்கட்டுப்படுத்த முணையவில்லை. இந்த நேரத்தில் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசவின் பாதுகாப்பு அமைச்சரான ரஞ்சனிடம் முஸ்லிம்களின் கைது பற்றி ஊடகங்கள் முறையிட்ட போது "காட்டுக்குள்ளிருந்து வந்த புலிகள் புல்லையா திண்பது" என கூறி முஸ்லிம்களின் கைதையும் சித்திரவதை செய்யப்படுவதையும், பணம் பறித்த பின் விடுவதையும் நியாயப்படுத்தினார்.
இவருக்கெதிராக பிரேமதாச மூலம் அஷ்ரப் நடவடிக்கை எடுக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் தேவையை கிழக்கு முஸ்லிம்களுக்கு உணர்த்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் இதனை திட்டமிட்டு மறை முகமாக ஆதரவு வழங்குகின்றதோ என்ற சந்தேகம் முபாறக் மௌலவிக்கு ஏற்பட்டது. இந்த அசாதாரண சூழலில் முபாறக் மௌலவியின் சகோதரர் அக்ரம் ரிழா புலிகளால் கைது செய்யப்பட்டு கல்முனை முகாமில் அடைக்கப்பட்டார்.
சுமார் 40 நாட்கள் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுவித்து தரும்படி சுமார் மூன்று தடவைகள் அவரின் தந்தை வை. அப்துல் மஜீத் மௌலவி தலைவர் அஷ்ரபை சந்திக்க கொழும்பு சென்று வந்தார். ஆனாலும் அஷ்ரப் அவரை கணக்கில் எடுக்கவில்லை என்றும் இதையெல்லாம் பார்க்கவா நான் இருக்கிறேன் என சொன்னதாகவும் மௌலவி தன் பிள்ளைகளிடம் சொல்லியிருந்தார்.
40 நாட்களில் புலிகள் கல்முனை பொலிசாரை தாக்கியதை தொடர்ந்து ராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் புலிகள் கல்முனை முகாமை கைவிட்டு தாம் பிடித்து வைத்திருந்த முஸ்லிம்களையும் எடுத்துக்கொண்டு மட்டக்களப்பு பக்கம் தப்பி ஓடினர்.
அவ்வாறு ஓடும் போது ஓரிரு முஸ்லிம் இளைஞர்களை அவர்களின் உறவினர் மூலம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு புலிகல் விடுவித்தனர். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை செயற்பாட்டாளர்கள் மூலம். இந்த உதவி அப்துல் மஜீத் மௌலவிக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கல்முனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் மட்டக்களப்பு முகாமில் வைக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த வாய்த்தகவலை நம்பிய மௌலவி, காத்தான்குடியில் உள்ள தனது நண்பர் ஒருவர் மூலம் தனது மகனை விடுவிக்கலாம் என எண்ணி கொழும்பிலிருந்து வந்து கல்முனை ஊடாக காத்தான்குடி போன வாகனத்தில் ஏறி பயணமானார்.
இடையில் குருக்கள் மடம் என்ற இடத்தில் அந்த வாகனத்தொடர் மறிக்கப்பட்டு அப்துல் மஜீத் மௌலவி உட்பட சுமார் 125 முஸ்லிம்கள் தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். அவர்கள் எவரின் உடல்களும் இன்று வரை கிடைக்கவில்லை.
அதே போல் புலிகளால் பிடித்து செல்லப்பட்ட இன்றைய உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதின் சகோதரருக்கும் என்ன நடந்தது என்று இன்று வரை தெரியவில்லை.
இதுவெல்லாம் தான் நம்பிய முஸ்லிம் காங்கிரஸ் இந்தவிடயத்தில் உதவாததே காரணம் என்பதை முபாறக் மௌலவி புரிந்து கொண்டார். அஷ்ரப் முயற்சி செய்திருந்தால் அந்த 40 நாட்களுள் புலிகளுடன் தேனிலவு கொண்டாடிய பிரேமதாச மூலம் அவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நிச்சயம் விடுவிக்கப்பட்டிருப்பார் என்று தெரிந்தது.
முஸ்லிம் சமூகத்துக்கான விடுதலைக்குரல் என நினைத்து தான் உதவி செய்த முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் இளைஞர்கள் கைதுக்கு மறைமுகமாக துணை போனதன் மூலம் முஸ்லிம்களை உணர்ச்சியூட்டி அக்கட்சி, தனக்குரிய வாக்குகளை அதிகரிக்க முயற்சி செய்துள்ளது என்பதை முபாறக் மௌலவி புரிந்து கொண்டார்.
புலிகள் முஸ்லிம்கள் மீது பாய்ந்ததை பிரேமதாச மூலம் தடுக்க வாய்ப்பு இருந்தும் தனது அரசியல் நலனுக்காக முஸ்லிம் இளைஞர்களை பலிகொடுத்தமை மூலம் முஸ்லிம் காங்கிரஸ் பிழையான பாதையில் போகிறது என்பது தெளிவாக புரிந்தது. ஆனாலும் முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சி தேவை என்பதை முபாறக் மௌலவி புரிந்திருந்தார். அதனால் அக்கட்சியிடன் இணைந்து செயற்படுவதை தவிர்த்து அக்கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்தும் பல பத்திரிகைகளில் எழுதி வந்தார்.
அஷ்ரபின் நல்ல விடயங்களை பாராட்டுவதுடன் தவறுகளையும், சமூக தேவைகளையும் சுட்டிக்காட்டி அவருக்கு கடிதங்கள் எழுதினார். 1993ம் ஆண்டு சேகு இஸ்ஸதீன் போன்றோர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு "ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சி" என்ற கட்சியை ஆரம்பித்த போது, இது முபாறக் மௌலவிக்கு பிடிக்கவில்லை. காரணம் முஸ்லிம் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி முஸ்லிம்களுக்கு போதும் என கருதினார்.
அதனால் முஸ்லிம் கட்சிக்கு எதிராக இன்னொரு கட்சியை ஆரம்பித்து அதன் மூலம் ஊடக அறிக்கை விடுவதன் மூலமே அதனை ஊடகங்கள் ஏற்றுக்கொள்ளும் என்ற யதார்த்தத்தை புரிந்தார். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் உயர்சபை, பிரதிநிதிகள் ஊழல் நிறைந்தவர்களாக இருந்ததால் இந்த சமூகத்துக்கு உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சி அவசியம் என்பதை முபாறக் அப்துல் மஜீத் புரிந்தார்.
அதனால் 1993 ம் ஆண்டு உலமாக்கள் தலைமையிலான "முஸ்லிம் மக்கள் கட்சி" என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியின் பிரதான நோக்கம் மு.காவுக்கு பக்க பலமாக இருப்பதும் அக்கட்சியை நெறிப்படுத்துவதும், உலமாக்கள் தலைமையிலான அரசியலை ஊக்குவிப்பதுமாகவே இருந்தது.
அதன் பின் 1994ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிக்கா அரசாங்கத்தை கொண்டு வந்து தலைவர் அஷ்ரப், கப்பல், கப்பற்துறை புனர்வாழ்வு அமைச்சரானார். அவர் அமைச்சராகி ஒரு வருடம் ஆகு முன் அவரின் கப்பல் அமைச்சை பிரதமர் சந்திரிக்கா பறித்தெடுத்தார். இதற்கு காரணம் கப்பல் அமைச்சில் ஊழல் என்று சொல்லப்பட்டது. அப்படியல்ல ஒரு முஸ்லிமிடம் நாட்டின் முக்கியமான கப்பல் அமைச்சு இருக்க கூடாது என்ற இனவாதிகளின் கருத்தை சந்திரிக்கா ஏற்றார் என்ற கருத்தும் நிலவியது.
எது எப்படியிருந்த போதும் சந்திரிக்காவை பிரதமராக்கிய அஷ்ரபை இவ்வாறு அவமதித்ததை முபாறக் மௌலவியால் ஜீரணிக்க முடியவில்லை. கப்பல் அமைச்சை பறித்த போது அனைத்து அமைச்சுக்களையும் தூக்கி வீசிவிட்டு வரும் வீரத்தளபதியாகவே அவர் தலைவரை பார்த்தார். ஆனால் அவர் இது பற்றி எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமைதியானது முபாறக் மௌலவிக்கு பிடிக்கவில்லை. பதவிகளுக்கு மு.கா அடிமையாகிவிட்டதாகவே நினைத்தார். இந்த நிலையில் 1995ம் ஆண்டு ஜனதிபதி தேர்தல் வந்தது.
1995ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அன்றைய பிரதமர் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். மு.கா தலைவர் அஷ்ரப் அவரது அமைச்சரவை அமைச்சராக இருந்ததால் சந்திரிக்காவுக்கே தமது ஆதரவு என அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பு தலைவர் அஷ்ரபின் இமேஜுக்கு மாற்றமானதாகவே முபாறக் அப்துல் மஜீத் கண்டார். அவர் சந்திரிக்காவை பிரதமர் ஆக்கியிருந்தும் கப்பல் அமைச்சை பறித்த சந்திரிக்கா விடயத்தில் மீண்டும் தவறு செய்வதாகவே உணர்ந்தார். மீண்டும் கப்பல் அமைச்சை எடுத்துக்கொண்டு ஆதரவளித்திருக்கலாம் என்பதே முபாறக் மௌலவியின் நிலைப்பாடு.
அஷ்ரப் அமைச்சரானது முதல் அவருக்கும் முபாறக் மௌலவிக்கும் எந்த நேரடி தொடர்பும் இருக்கவில்லை. அமைச்சரான பின் அவரை எதிர்த்த பலர் அவரோடு ஒட்டிக்கொண்டதால் அமைச்சர் அழைக்காமல் அவரை சந்திக்க செல்வதில்லை என்ற வைராக்கியம் காரணமாக அவரை நேரடியாக கண்டு தனது கருத்தை சொல்ல முடியாத நிலை. அப்போதெல்லாம் கைபேசி இல்லாத காலம்.
அதனால், இந்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்காவுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது என்றும் சந்திரிக்காவை முஸ்லிம்கள் நம்ப முடியாது எனவும் முபாறக் அப்துல் மஜீத் ஊடக அறிக்கை வெளியிட்டார்.
பிரபல தமிழ் பத்திரிகைக்கு இவ்வறிக்கை அனுப்பப்பட்ட போது அதன் ஆசிரியர் அல்லது பிரதானி அந்த அறிக்கையை தலைவர் அஷ்ரபின் பார்வைக்கு அனுப்பியுள்ளார். சில நாட்களில் அஷ்ரபின் கல்முனை இணைப்பாளர் மசூத் ஆசிரியர் முபாறக் மௌலவியின் கல்முனை வர்த்தக நிலைய தொலை பேசிக்கு தொடர்பு கொண்டு, இப்படி ஒரு அறிக்கையை நீங்கள் விட்டுள்ளீர்களாம், என்ன காரணம் என தலைவர் உங்களிடம் கேட்க சொன்னார் என்றார்.
"தலைவருக்கு என்னை தெரியும், அவரது காரியாலயத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள எனது வீடும் தெரியும். அதனால் என்னை நேரடியாக சந்திக்க சொல்லுங்கள் நான் அவரிடம் காரணத்தை கூறுகிறேன்" என்றார் முபாறக் அப்துல் மஜீத். இது விடயம் தலைவரிடம் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனாலும் அவர் தொடர்பு கொள்ளவில்லை. அத்துடன் முபாறக் மௌலவியின் அறிக்கை பத்திரிகையில் வெளிவராமல் தடுக்கப்பட்டது. தன் கடமை சொல்வது மட்டுமே என முபாறக் மௌலவி அத்தோடு விட்டு விட்டார். ஆனாலும் அறிக்கையில் இருந்த விடயம் கல்முனை முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கு தெரிந்திருந்தது. அந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிப்பதில்லை என முடிவு செய்தார் முபாறக் மௌலவி.
அதன் பின் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவாக செயற்படுவதை முபாறக் மௌலவி குறைத்துக்கொண்டாலும் அக்கட்சியை விட்டும் விலகவில்லை. ஆனாலும் முஸ்லிம் மக்கள் கட்சி என்ற பெயரில் அஷ்ரப் பற்றியும் முஸ்லிம் காங்கிரஸின் தவறான பாதைகள் பற்றியும் விமர்சிக்கத்தொடங்கினார். இது மு.காவினருக்கு அதிருப்தியை தந்தாலும் அறிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்திருந்தனர். இதனை மௌலவியை கொழும்பில் சந்தித்த மருதூர் கணி பின்வருமாறு அவரிடம் கூறினார்,
உங்களின் அறிக்கைகளுக்கு நான் பதில் அளிக்க நினைப்பதுண்டு. ஆனால் அதில் பல நியாயங்கள் இருப்பதால் பதில் அறிக்கை விடவில்லை என்றார்.
இதன் மூலம் முஸ்லிம் மக்கள் கட்சியின் தேவை உறுதிப்பட்டுள்ளதுடன் அக்கட்சி பெயரில் வெளிவரும் அறிக்கைகள் முஸ்லிம் காங்கிரசை புடம் போடுகிறது என்பது தெரிந்தது.
சந்திரிக்காவை நம்ப முடியாது என்று முபாறக் அப்துல் மஜீத் 1995ம் ஆண்டு சொன்னது 2000ம் ஆண்டளவில்தான் தலைவர் அஷ்ரபுக்கு சந்திரிக்கா பற்றி தெரிந்து கொண்டார். கடைசியில் மக்காவுக்கு சென்று "அந்த 52 நாட்கள்" என்ற புத்தகத்தை எழுதினார்.
2000ம் ஆண்டு தலைவர் அஷ்ரபுக்கு ஜனாதிபதி சந்திரிக்கா மன உளைச்சலை கொடுத்தமை வேதனையான விடயம். அது மட்டுமின்றி 1994ம் ஆண்டு சந்திரிக்காவுடன் இணையும் போது முஸ்லிம்களின் எந்த தேவையையும் முன் வைத்து அஷ்ரப் ஒப்பந்தம் பண்ணவில்லை என்பதை அந்த நூலில் அவர் தெரிவித்திருந்ததன் மூலம் மு.கா பிழையான வழியில் செல்கின்றது என்ற தனது குற்றச்சாட்டு சரியானது என்பதை முபாறக் மௌலவி புரிந்து கொண்டார். தான் சமூகத்தளபதியாக மிகவும் கனவு கண்ட துரோணர் தன் கண் முன்பே துவண்டு போனதாக கண்டார்.
ஆனாலும் அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் கட்சி தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார். இதன் காரணமாகவே தனது முஸ்லிம் மக்கள் கட்சியை பதிவு செய்ய அவர் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.
அதனால் 1999ம் ஆண்டு அஷ்ரபால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் முதன்மை அங்கத்தவராகவும் இணைந்து கொண்டார். அதே போல் 2000ம் ஆண்டு அஷ்ரபின் மறைவின் பின் நடை பெற்ற பொதுத்தேர்தலில் மு.காவுக்கே முபாறக் அப்துல் மஜீத் தலைமையிலான முஸ்லிம் மக்கள் கட்சி பகிரங்கமாக ஆதரவளித்தது. தலைவரின் மரணத்தை தொடர்ந்து ரவூப் ஹக்கீம் தலைவராக நியமிக்கப்பட்ட போது முஸ்லிம் காங்கிரசின் இணைப்பாளர் என்ற வகையில் ஹக்கீம் தலைமைத்துவத்தை முபாறக் மௌலவி ஏற்றுக்கொண்டு ஹக்கீமுக்கு வாழ்த்து தெரிவித்து கவிதையும் எழுதினார். இது நவமணி பத்திரிகையிலும் வெளி வந்தது.
ஹக்கீம், பேரியல் கூட்டுத்தலைமை பிரச்சினை வந்த போது மு.கா கட்சிக்கு ஒரே தலைமைதான் நல்லது என்பதையும் ஹக்கீமை தலைவர் ஆக்கும்படியும் முதலில் பகிரங்கமாக அறிக்கை விட்டது முபாறக் மௌலவி மட்டுமே.
ஹக்கீம் மு.காவின் தனித்தலைமையாக நியமிக்கப்பட்ட பின் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. சந்திரிக்காவின் அமைச்சரவையில் இருந்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட தொடங்கினார். இந்த சூழ் நிலையில் மாவனல்லை கலவரம் ஏற்பட்டது. மிக இலகுவாக அக்கலவரத்தை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தும் ஒரு வாரத்துக்கு அக்கலவரம் நடக்க சந்திரிக்கா உதவினார்.
அப்போதும் ஹக்கீம் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யவில்லை. பின்னர் சில மாதங்களில் ஹக்கீம் அமைச்சரவை உரையாடல்களை ஐ தே கவிடம் கூறுகின்றார் என குற்றம் சாட்டி ஹக்கீமின் அமைச்சர் பதவியை சந்திரிக்கா பறித்தார். என்னதான் இருந்தாலும் இதை முஸ்லிம் சமூகம் ஏற்கவில்லை. முபாறக் அப்துல் மஜீத் ஹக்கீம் சார்பாக நின்றார். அஷ்ரபுக்கே துரோகம் செய்த சந்திரிக்கா ஹக்கீமுக்கு செய்தது பெரிய விசயமில்லை. ஆனாலும் ஹக்கீம் தனித்துவமாக செயற்படாமல் ஐ தே க சார்பாக இருப்பது ஏன் என்றும் அப்போது புரியவில்லை. ஹக்கீமை அமைச்சரவையிலிருந்து நீக்கியதன் காரணமாக பாராளுமன்றத்தில் அரச தரப்பு எண்ணிக்கை குறைந்ததால் சந்திரிக்கா பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தார்.
அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 10 க்கு மேற்பட்ட உறுப்பினரை பெற்று ஐ தே க அரசு வர உதவியது. ஐ தே க அரசாங்கம் உடனடியாக விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது.
2002ம் ஆண்டு ஐ தே க தலைமையிலான இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நேருக்கு நேர் ஆரம்பமாகின. எந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்படாத அளவு பேச்சுவார்த்தைகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டன.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அதாவுள்ளா உட்பட அக்கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் வடக்குக்கு சென்று பிரபாகரனை சந்தித்து புரியாணி சாப்பிட்டனர். அத்துடன் திரும்பியிருந்தால் பரவாயில்லை, முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஒரு குழு என ஹக்கீம் பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தார்.
நாட்டில் சுமார் 25 லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலையில் சுமார் 15 லட்சம் முஸ்லிம்களை ஒரு குழு என ஹக்கீம் ஏற்றுக்கொண்டது ஏன் என்ற பலமான கேள்வி எழுந்தது. இதனை முபாறக் மௌலவி கடுமையாக விமர்சித்தார். ஆனாலும் நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதால் அதன் போக்கை கவனித்தார். அதைத்தொடர்ந்து ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்போவதான செய்திகள் வெளி வந்தன. இங்குதான் பிரச்சினையே ஆரம்பித்தது.
இனப்பிரச்சினை என்பது இந்த நாட்டில் முப்பரிமாணம் கொண்டது. ஒரு காலத்தில் தமிழ், சிங்களம் என்றிருந்த போதும் பின்னர் போராட்ட இயக்கங்களால் முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டதால் இந்த நாட்டின் மூன்றாவது தேசிய இனம் முஸ்லிம்கள் என்பதை தமிழ் போராட்ட இயக்கங்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இதனை வலியுறுத்தும் வகையில் விடுதலைப்புலிகள் வட மாகாண முஸ்லிம்களின் அனைத்து உடமைகளையும் பறித்துக்கொண்டு வெளியேற்றியதால் முஸ்லிம்கள் தனியான தேசிய இனம் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் மூன்றாவது தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற குரல்கள் முஸ்லிம் சமூகத்துள் ஒலித்தன. அந்த நேரம் முஸ்லிம் காங்கிரஸ் 11 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்ததால் அக்கட்சி சார்பில் ரவூப் ஹக்கீம் மட்டுமே கெபினட் அமைச்சராக இருந்தார். அதனால் அவர் முஸ்லிம் தனித்தரப்புக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது முழு சமூகத்தின் கருத்தாக இருந்தது.
தனித்தரப்பின் அவசியம் பற்றியும் தனித்தரப்பாக கலந்து கொண்டால்த்தான் இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்குரிய தீர்வை பெற முடியும் என முபாறக் மௌலவி, ஹக்கீமுக்கு கடிதம் எழுதினார்.
பேச்சுவார்த்தைக்கு செல்லும் திகதியும் வந்தது. ஆனால் ஹக்கீம் முஸ்லிம் தனித்தரப்பாக இன்றி, தான் அரச தரப்பாக செல்வதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். இது பாரிய சமூகத்துக்கு அதிர்ச்சியை கொடுத்தது
ஹக்கீம் ஐ தே கவின் உறுப்பினராக இருந்தால் அவர் அரச தரப்பாக கலந்து கொள்வதில் நியாயம் உண்டு. ஆனால் முஸ்லிம்களின் ஒரே கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் அச்சமூகத்தின் தலைவராக கலந்து கொள்ளாமல் அரச தரப்பு வாலாக அவர் கலந்து கொள்வதன் பின்னால் நிச்சயம் முஸ்லிம்களுக்கெதிரான சதி இருப்பது புரிந்தது. இதனை பிழை என சுட்டிக்காட்டக்கூடிய வகையில் முஸ்லிம்களின் வாக்குகளை கொண்ட இன்னொரு முஸ்லிம் கட்சி இல்லாமையின் கைசேதம் அப்போதுதான் புரிந்தது.
ஹக்கீம் மிகப்பெரிய தவறை தெரிந்து கொண்டே செய்கிறார் என்பதை முபாறக் மௌலவி புரிந்து கொண்டார். இதன் பின்னால் ஐ தே க, புலிகள், சர்வதேசம் என ஒருங்கிணைந்த சதி இருப்பது தெரிந்தது. ஹக்கீம் அவற்றோடு இணைந்து திட்டமிட்டே தனித்தரப்பை மறுத்து, அரச தரப்பாக கலந்து கொண்டு முஸ்லிம்களின் இனத்துவ அடையாளத்தை அழிக்க துணை போகிறார் என்பது தெரிந்தது.
இந்த சூழ் நிலையில் கிழக்கு மாகாண உலமாக்களின் மாநாடு காத்தான்குடியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முபாறக் அப்துல் மஜீத் மௌலவி உரையாற்றும் போது ஹக்கீம் தனித்தரப்பாக கலந்து கொள்ளாமல் அரச தரப்பாக கலந்து கொண்டதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் செய்து விட்டார் என தெரிவித்தார். இக்கருத்தை பெரும்பாலான உலமாக்கள் அப்போது ஏற்கவில்லை. அப்போது முபாறக் மௌலவியின் கருத்தை எதிர்த்த உலமாக்கள் பலர் பல வருடங்களின் பின் அவர் சொன்னது உண்மை என ஏற்றுக்கொண்டனர்.
உலமா கட்சியின் வரலாறு என்பது முஸ்லிம் மக்கள் கட்சி என்றே ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக இல்லாமல் அக்கட்சியை நெறிப்படுத்தும் கட்சியாகவே முதலில் இயங்கியது.
மு.காவின் தலைமையினதும் உறுப்பினர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்ட அதன் உறுப்பினர்கள் பெரிதும் அச்சப்பட்டனர். எங்கே தமக்கு தலைவரின் கடாட்சம் கிடைக்காமல் போய் விடுமோ என்று அஞ்சினர். முபாறக் மௌலவி முஸ்லிம் காங்கிரசின் இணைப்பாளராக இருந்த போதும் அதன் உயர் பீட உறுப்பினர் இல்லை என்பதால் அவரால் தலைமைக்கு அனுப்பப்படும் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
இதுவும் முஸ்லிம் மக்கள் கட்சியை ஆரம்பிப்பதற்கான காரணமாகும். இன்னொரு முஸ்லிம் கட்சியின் அறிக்கை வருவதன் மூலம் எங்கே கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வந்து விடுமோ என்ற அச்சத்தில் மு.கா, மக்களுக்கு சேவை செய்யும் என்பதற்காக முஸ்லிம் மக்கள் கட்சியை முபாறக் மௌலவி ஆரம்பித்து, அதனை வெறும் அறிக்கை அரசியலுக்கு மட்டும் பாவிக்கும் கட்சியாகவே செயற்படுத்தி வந்தார். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் பேசப்பயந்த பல விடயங்களை முஸ்லிம் மக்கள் கட்சி கொண்டு வந்தது.
பத்திரிகைகளில் வெளிவந்த மு. ம. கட்சியின் அறிக்கைகள் சில கீழே தரப்படுகிறது.
2001ம் ஆண்டு முபாறக் அப்துல் மஜீத் தலைமையிலான முஸ்லிம் மக்கள் கட்சியின் ஆலோசனை.
அரசியலில் வெறும் பார்வையாளராக அல்லது எடுபிடியாக இருக்காமல் தன் கருத்தை நேரடியாக சொல்லியிருந்தார். அக்கருத்துக்களை முஸ்லிம் காங்கிரஸ் கேட்டிருந்தால் முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் நன்மைகள் பெற்றிருக்கும்.
பேரின கட்சிகளுடன் மு.கா. செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் எழுத்து மூலம் இருக்கவேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சி
கடந்த காலங்களில் தேர்தல் கூட்டுகளின் போது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் பேரின கட்சிகளுடன் கூட்டு வைத்தது போன்ற தவறுகளை இனியும் செய்யக்கூடாதென முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது . மறைந்த மு.கா. தலைவர் அஷ்ரப் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியலின் தந்தை என்பதிலும், மிக நுட்பமான அறிவு படைத்த மாமனிதர் என்பதிலும் கருத்து வேறுபாடு இருக்க முடியாதெனினும் அத்தகைய சிறப்பு மிக்க தலைவர் விட்ட சில அரசியல் தவறுகள் போன்று இன்றைய தலைமைத்துவமும் தவறிழைத்து விடக்கூடாது .
1994 ஆம் ஆண்டு சந்திரிகா அஷ்ரப் எனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மு.கா. வுக்கும் பொதுசன முன்னணிக்கும் இடையில் கூட்டு ஏற்பட்டது . இதற்கான ஒப்பந்தம் எழுத்து மூலம் உருவாக்கப்பட்டு ஒப்பமிடப்பட்டதா ? அவற்றில் என்னென்ன அம்சங்கள் இருந்தன என்பன பற்றி குறைந்தது மு.கா அங்கத்தவர்களிடையேயாவது பகிரங்கப்படுத்தப்படவில்லை. இது தலைவர் அஷ்ரப்பினால் விடப்பட்ட முதல் தவறாகும்.
அதன் பின்னர் ஆட்சி அமைக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே தலைவருக்கு வழங்கப் பட்டிருந்த அமைச்சுப் பதவிகளில், கப்பல் பறி முதல் செய்யப்பட்ட போது இதற்கு எதிராக தலைவர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை . குறைந்தது தான் மட்டுமாவது எதிரணியில் உட்காரப் போவதாக அரசை பயமுறுத்தி இருக்கலாம் . தனக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப்பதவியில் சில பறி போன பின்பும் அவர் அரசுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி காவின் வெற்றிக்கும் உழைத்ததானது பேரினவாதிகளைப் பொறுத்தவரை மு.கா வையும் அதன் தலைமைத்துவத்தையும் சிறுமைப்படுத்திக்காட்டியது . அதன் பின் 2000 ஆம் ஆண்டு அமைச்சர் பௌசியுடனான மோதலில், அவர் பேசியது தவறாக இருந்தும் பொதுசன முன்னணி முக்கியஸ்தர்கள் நீதியாக சிந்திக்காமல் நடந்து கொண்டபோதும் தலைவர் அஷ்ரப் தனது சவாலை விட்டுக்கொடுத்ததன் மூலம் மிக மோசமாக தலை குனிந்தார் . இது அவரது ஆளுமைக்கு பெரிதும் களங்கம் ஏற்படுத்தியது . அவ்வேளையில் கடினமான பிடிவாதத்தைக் கொள்ளாதது பெருந்தவறாகும் . நியாயம் தம்பக்கம் இருக்கும்போது அதற்கான போராட்டம் அவசியமாகும் .
..............
பொது ஜன முன்னணியுடன் அரசியற் கூட்டை ஏற்படுத்திக்கொண்டது மிகப்பெரிய தவறாகும் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் றிஸ்வியின் இடத்துக்கு மு.கா.வால் ஒருவரை நியமிக்க முடியாமைக்கு இதுவே காரணமாகும் . ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போ தைய தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இந்த அரசில் சேருவ தில்லை என மிகவும் இறுக்கமான பிடிவாதத்தில் இருந்தபோது அதனை வரவேற்ற ஐ.தே.க. வினர் , தேர்தல் கூட்டு சம்பந்தமாக அவரின் பிடிவாதம் கண்டு அதனை ஜனநாயக விரோதம் என சொல்வது அவர்களின் சுய நலத்தைக் காட்டுகிறது . இப்போதே ஐ.தே.க.வின் முஸ்லிம் அங்கத்த வர்கள் மு.கா. தலைவருக்கு முட்டுக்கட்டை போட ஆரம்பித்தால் அக்கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மேலும் பல நெருக்குதல்களுக்கு மு.கா. தலைவர் முகம் கொடுக்க நேரிடலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி அச்சம் கொள்கிறது . ஆகவே, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பேரின கட்சிகளுடன் கூட்டுச்சேர்வதாயின் எழுத்து மூலமான மிக இறுக்கமான முறையில் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது .
வீரகேசரி. 22. 10. 2001
2002ம் ஆண்டில் ஹக்கீம் ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு அரச தரப்பாக போன காரணத்தால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் உட்பூசல் அதிகரித்தது. ஹக்கீமுக்கு எதிரான அதாவுள்ளா அணி, ஆதரவான அணி என இரண்டு அணிகள் உருவாகி மு. காவின் புதிய உயர் பீடம் கூடுவதாக அதன் செயலாளர் டொக்டர் ஹப்ரத் அறிவித்தார்.
இதை கேள்வியுற்ற ஹக்கீம் ஒஸ்லோ பேச்சுவார்த்தையை கைவிட்டு இடையில் நாடு வந்தார். அதற்கிடையில் தாருஸ்ஸலாமில் உயர் பீட கூட்டம் நடைபெறாமல் புத்தளம் பாயிஸ், பாதாள உலகம் போன்றவற்றை பயன்படுத்தி கூட்டத்துக்கு வந்தோர் அடித்து விரட்டப்பட்டனர்.
ஹக்கீம் தனது ஆதரவு ஹசனலி அணியுடன் மீண்டும் உயர் பீடம் கூடி தலைமையை தக்க வைத்தார். ஆனாலும் அன்று ஒஸ்லோவில் அவர் விட்ட முஸ்லிம் தனித்தரப்பு என்பதை இன்று வரை மு. காவால் எந்தவொரு பேச்சு வார்த்தையிலும் பெற முடியவில்லை.
2002ம் ஆண்டு ஐ தே க தலைமையிலான இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நேருக்கு நேர் ஆரம்பமாகின.
எந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்படாத அளவு பேச்சுவார்த்தைகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அதாவுள்ளா உட்பட அக்கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் வடக்குக்கு சென்று பிரபாகரனை சந்தித்து புரியாணி சாப்பிட்டனர். அத்துடன் திரும்பியிருந்தால் பரவாயில்லை, முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஒரு குழு என ஹக்கீம் பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்ததாக ஊடகங்கள் கூறின.
நாட்டில் சுமார் 25 லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலையில் சுமார் 15 லட்சம் முஸ்லிம்களை ஒரு குழு என ஹக்கீம் ஏற்றுக்கொண்டது ஏன் என்ற பலமான கேள்வி எழுந்தது. இதனை முபாறக் மௌலவி விமர்சித்தார். ஆனாலும் நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதால் அதன் போக்கை கவனித்தார்.
அதைத்தொடர்ந்து ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்போவதான செய்திகள் வெளி வந்தன. இங்குதான் பிரச்சினையே ஆரம்பித்தது. இனப்பிரச்சினை என்பது இந்த நாட்டில் முப்பரிமாணம் கொண்டது. ஒரு காலத்தில் தமிழ், சிங்களம் என்றிருந்த போதும் பின்னர் போராட்ட இயக்கங்களால் முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டதால் இந்த நாட்டின் மூன்றாவது தேசிய இனம் முஸ்லிம்கள் என்பதை தமிழ் போராட்ட இயக்கங்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இதனை வலியுறுத்தும் வகையில் விடுதலைப்புலிகள் வட மாகாண முஸ்லிம்களின் அனைத்து உடமைகளையும் பறித்துக்கொண்டு வெளியேற்றியதால் முஸ்லிம்கள் தனியான தேசிய இனம் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் மூன்றாவது தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற குரல்கள் முஸ்லிம் சமூகத்துள் ஒலித்தன. அந்த நேரம் முஸ்லிம் காங்கிரஸ் 11 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்ததால் அக்கட்சி சார்பில் ரவூப் ஹக்கீம் மட்டுமே கெபினட் அமைச்சராக இருந்தார். அதனால் அவர் முஸ்லிம் தனித்தரப்புக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது முழு சமூகத்தின் கருத்தாக இருந்தது.
தனித்தரப்பின் அவசியம் பற்றியும் தனித்தரப்பாக கலந்து கொண்டால்த்தான் இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்குரிய தீர்வை பெற முடியும் என முபாறக் மௌலவி, ஹக்கீமுக்கு கடிதம் எழுதினார்.
பேச்சுவார்த்தைக்கு செல்லும் திகதியும் வந்தது. ஆனால் ஹக்கீம் முஸ்லிம் தனித்தரப்பாக இன்றி, தான் அரச தரப்பாக செல்வதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். இது பாரிய அதிர்ச்சியை கொடுத்தது
ஹக்கீம் ஐ தே கவின் உறுப்பினராக இருந்தால் அவர் அரச தரப்பாக கலந்து கொள்வதில் நியாயம் உண்டு. ஆனால் முஸ்லிம்களின் ஒரே கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் அச்சமூகத்தின் தலைவராக கலந்து கொள்ளாமல் அரச தரப்பு வாலாக அவர் கலந்து கொள்வதன் பின்னால் நிச்சயம் முஸ்லிம்களுக்கெதிரான சதி இருப்பது புரிந்தது.
இதனை பிழை என சுட்டிக்காட்டக்கூடிய வகையில் முஸ்லிம்களின் வாக்குகளை கொண்ட இன்னொரு முஸ்லிம் கட்சி இல்லாமையின் கைசேதம் அப்போதுதான் புரிந்தது. ஹக்கீம் மிகப்பெரிய தவறை தெரிந்து கொண்டே செய்கிறார் என்பதை முபாறக் மௌலவி புரிந்து கொண்டார்.
இதன் பின்னால் ஐ தே க, புலிகள், சர்வதேசம் என ஒருங்கிணைந்த சதி இருப்பது தெரிந்தது. ஹக்கீம் அவற்றோடு இணைந்து திட்டமிட்டே தனித்தரப்பை மறுத்து, அரச தரப்பாக கலந்து கொண்டு முஸ்லிம்களின் இனத்துவ அடையாளத்தை அழிக்க துணை போகிறார் என்பது தெரிந்தது.
இந்த சூழ் நிலையில் கிழக்கு மாகாண உலமாக்களின் மாநாடு காத்தான்குடியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முபாறக் மௌலவி உரையாற்றும் போது ஹக்கீம் தனித்தரப்பாக கலந்து கொள்ளாமல் அரச தரப்பாக கலந்து கொண்டதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் செய்து விட்டார் என தெரிவித்தார். இக்கருத்தை பெரும்பாலான உலமாக்கள் அப்போது ஏற்கவில்லை. அப்போது முபாறக் மௌலவியின் கருத்தை எதிர்த்த உலமாக்கள் சிலர் பல வருடங்களின் பின் அவர் சொன்னது உண்மை என ஏற்றுக்கொண்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மு. காவில் இருந்து விலகிய அதாவுள்ளா அணி தேசிய காங்கிரஸ் என்ற கட்சியாக 2005ல் உருவெடுத்தது. அதே போல் அதே காலப்பகுதியில் ஏற்கனவே சேகு இஸ்ஸதீன், ரசூல் ஆகியோரால் அஷ்ரப் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சியை ஹாபிஸ் நசீர் அஹமத் விலை கொடுத்து வாங்கியிருந்தார். அதே போல் அக்கரைப்பற்று பௌசர், காத்தான்குடி ஹாரிஸ், கொழும்பு நிசார் மௌலானா போன்றவர்களால் ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் கட்சி பதிவு செய்யப்பட்டது. அதே போல் எம் ஐ எம் முஹிதீன் தலைமையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கட்சியும் இயங்கியது.
ஆனாலும் முபாறக் மௌலவி தனது முஸ்லிம் மக்கள் கட்சியை பதிவு செய்யாமல் முஸ்லிம் காங்கிரசையே ஆதரித்தார். ஆனாலும் ரவூப் ஹக்கீமின் தொடர்ச்சியான தவறுகளாலும் கண்ணை மூடிக்கொண்டு மடையர்கள் ஆகி விட்டோம் என சொல்லும் ஹக்கீமின் மடத்தனங்களாலும் அவசியம் முஸ்லிம் காங்கிரசுக்கு மாற்றீடாக நேர்மையான, உண்மை பேசும் முஸ்லிம் கட்சி தேவை என்பதை உணர்ந்தார்.
இந்த சூழ்நிலையில் ஹக்கீம் குமாரி பிரச்சினை ஏற்பட்டு முஸ்லிம் காங்கிரசுக்குள் ரிசாத் பதியுதீன் தலைமையில் மற்றுமொரு பிளவு ஏற்பட்டது. தானும் தண்ணீர் ஊற்றி வளர்த்த முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கீமின் தவறுகளால் தன் கண்முன்னே சிதறுவதை கண்ட போது சமூகத்துக்கான தனது விமர்சன அரசியலுடன் பிரதிநிதித்துவ அரசியலை தீர்மாணிக்கும் சக்தியாக தனியான இன்னொரு கட்சி அதுவும் உலமாக்கள் தலைமையில் தேவை என்பதை முபாறக் மௌலவி உறுதியாக உணர்ந்தார்.
இதன் படி 2004 பொதுத்தேர்தல் வந்த போது ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து அத்தேர்தலில் முதலாவதாக களமிறங்கினார். அத்தேர்தலில் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரசில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டார். மறு பக்கம் அதாவுள்ளா, கல்முனை ஹரீஸ், பேரியல் அஷ்ரப் ஆகியோரும் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டனர்.
இரண்டு பக்கமும் பெரும் கட்சிகள். இவ்விரண்டையும் எதிர்த்து முபாறக் மௌலவியை முதன்மை வேட்பாளராக கொண்ட சிறிய கட்சி. மறு முணையில் மு. காவில் இருந்த ஹரீஸ் அதாவுள்ளாவின் பக்கம் மாறியதால் அவரை தோற்கடிப்பதற்காக ஹக்கீம் கல்முனை சார்பாக களத்தில் இறங்கினார். முஸ்லிம் கட்சி ஒன்றின் மாற்றீடு தேவை என்பது உணரப்பட்டு மக்களின் சிறிய செல்வாக்கு ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பின் இரட்டை இலை சின்னத்தின் பால் திரும்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அக்கட்சி முக்கியஸ்தர்கள் மயோன் முஸ்தபாவின் முயற்சி மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு விலை போய் அக்கட்சிக்கு ஆதரவளிப்பதாக ஊடகத்தில் தெரிவித்தனர்.
இதனால் முபாறக் மௌலவியின் ஐ தே கவுக்கெதிரான பிரச்சாரம் பிசு பிசுத்து வாக்குகள் குறைந்து விட்டன. ஆனாலும் இந்த துரோகங்களுக்கு மத்தியில் அந்த தேர்தலில் கட்சிகள், சுயேற்சைகள் என 35 அரசியல் கட்சிகள் களம் கண்ட திகாமடுல்ல மாவட்டத்தில் முபாறக் மௌலவி போட்டியிட்ட கட்சி 7வது இடத்துக்கு வந்தது.
இத்தேர்தலில் ஹக்கீம், அதா, பேரியல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஐ .மு. ம. கூட்டமைப்பு கட்சி விலை போனதால் அதிருப்தியுற்ற அக்கட்சியில் போட்டியிட்ட முபாறக் மௌலவி, அட்டாளைச்சேனை அமீர் இப்ராகீம் மௌலவி ஆகியோர் கொழும்பில் சந்தித்து தேர்தலில் போட்டியிடக்கூடியவாறு உலமாக்கள் தலைமையிலான கட்சியின் தேவை பற்றி ஆலோசித்தனர். அவர்களுடன் எலபடகம மௌலவி பதுர்தீன் கபூரி, அநுராதபுரம் பௌசான் மௌலவி, ஏறாவூர் முஸம்மில் மௌலவி ஆகியோரும் இணைந்தனர். ஈற்றில் "உலமாக்கள் தலைமையிலான ஐக்கிய முஸ்லிம் கட்சி" சுருக்கமாக உலமா கட்சி என்ற கட்சி 2005ம் ஆண்டு ஜூன் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் தலைவராக முபாறக் அப்துல் மஜீத், செயலாளராக மௌலவி அமீர் இப்ராகீம், கொள்கை பரப்பு செயலாளராக மௌலவி முஸம்மில் ஆகியோரும் உபதலைவர்களாக பதுருத்தீன் கபூரி, மௌலவி பௌசான், பிபிலை மௌலவி அப்துர்ரவூப் ஆகியோரும் மௌலவி அல்லாத சிலரும் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டனர்.
உலமா கட்சி முகம் கொடுத்த முதலாவது தேர்தல்.
உலமா கட்சியின் உருவாக்கம் நாட்டில் பாரிய அதிர்ச்சியை அரசியலில் ஏற்படுத்தியது. அக்கட்சியை வளரவிடாமல் தடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய தடை போட்டது. இல்லாத, பொல்லாத கதைகளை பரப்பினர். இந்நிலையில் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வந்தது. அப்போது ஹாபிஸ் நசீர் அஹமதிடம் இருந்து உலமா கட்சி தலைவருக்கு அழைப்பு வந்தது. உலமா கட்சியும் இணைந்து கூட்டாக செயற்படுவோம் என்றார்.
இதன் படி உலமா கட்சி அவரை சந்தித்து உரையாடி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்கினர். இதில் உலமாக்களின் ஐக்கிய முஸ்லிம் கட்சியும் இடம் பெற்றது. தேர்தலில் ஒரு பக்கம் மஹிந்த ராஜபக்ச மறுபக்கம் ரணில் விக்ரமசிங்ஹ.
மு. தே. கூட்டமைப்பும் உலமா கட்சியும் சேர்ந்து இரு வேட்பாளர்களையும் கண்டு பேசியது. ஆனாலும் ரணில் மூலம் ஏற்கனவே சமூகம் பல வஞ்சகங்களை கண்டிருந்ததால் ரணிலை ஆதரிப்பதில் முபாறக் மௌலவிக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆனாலும் கூட்டுக்கட்சி பொறுப்பு காரணமாக அமைதியாக இருந்தார்.
ரணிலை ஆதரிப்பதாக மு. தே. கூட்டமைப்பு ஊடகங்கள் முன்பு கூறியது. அதன் பின் கிண்ணியாவில் நடைபெற்ற ஐ தே க பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ஹாபிஸ் ஓரம் கட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். அவர் முபாறக் மௌலவியை தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஐ தே க சரி வராது என்றார். அப்படியாயின் மஹிந்தவை ஆதரிப்போம், அவர் புலிகளுக்கு எதிரானவர் என்றார் முபாறக் ஏ மஜீத்.
மஹிந்த வெல்லமாட்டார் என்றார் ஹாபிஸ். வெல்வாரா இல்லையா என்பதை விட புலிகளை ஒழிப்பாரா இல்லையா என்பதையே நான் சிந்திக்கிறேன் என்றார் முபாறக் மௌலவி. ஆனாலும் ஹாபிஸ் முடிவுக்கு வரவில்லை.
அதனால் உலமா கட்சி மஹிந்தவைக்கண்டு அவரோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அவரை ஆதரிப்பதாக அறிவித்தது. ரணிலை ஆதரிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது.
தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக இருந்த போது முபாறக் மௌலவியை தொடர்பு கொண்ட ஹாபிஸ் மஹிந்த வெல்வாரா என அடிக்கடி கேட்டார்.
வெல்வாரா என்று தெரியாது. ஆனால் எமக்கு இறைவன் உதவி செய்வான் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். பின்னர் சில வாரங்களில் தானும் மஹிந்தவை ஆதரிப்பதாக ஹாபிஸ் அறிவித்தார்.
அத்தேர்தலில் மஹிந்த ராஜ்பக்ஷ வென்றதன் மூலம் உலமா கட்சி முதலில் களமிறங்கிய ஜனாதிபதி தேர்தலில் உலமா கட்சி ஆதரித்த ஜனாதிபதி வெற்றி பெற்றமை சிறந்த சிந்தனைக்கும் நம்பிக்கைக்கும் வெற்றியாக அமைந்தது.
கட்சி ஆரம்பித்து அதன் முலம் தனக்கென எந்த பதவியும் பெறாமல் சமூகத்தின் குரலாக மட்டும் செயற்படுத்துவதில் முபாறக் அப்துல் மஜீத் மிகப்பெரிய வெற்றி பெற்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
0 comments :
Post a Comment