மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை இம்முறை எங்கள் வசமாகும் - மயில் வேட்பாளர் ஐயூப் உறுதி !



நூருல் ஹுதா உமர்-
டந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் போராளிகளாக இருந்து கட்சிக்கு உரமூட்டிய எங்களை பலிகொடுத்து எங்களின் ஊர்களுக்கு தேசிய காங்கிரஸ் தலைமையால் வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததால் மக்கள் இம்முறை தேசிய காங்கிரஸை நிராகரிக்க முடிவெடுத்துள்ளார்கள். அதனால் இசங்கணிச்சீமையில் ஒரு வேட்பாளரே கிடைக்காத நிலை அவர்களுக்கு உருவாகியுள்ளது. தேசிய காங்கிரஸ் வேட்பாளராக இசங்கனிசீமை வட்டாரத்தில் போட்டியிட வெளி வட்டாரத்தில் இருக்கும் ஒருவரை நிறுத்தியுள்ளார்கள். இவர்களுக்கு வாக்களிக்க இசங்கனிசீமை வட்டாரத்தில் யாரும் தயாராக இல்லை என அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்மை வேட்பாளருமான ரீ.எம். ஐயூப் தெரிவித்தார்.

நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் தலைமையால் அக்கரைப்பற்று பிரதேச சபை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதிலும் குறிப்பாக இசங்கணிச்சீமை வட்டார மக்களை முழுமையாக ஏமாற்றினார். இசங்கணிச்சீமை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு விடயங்களிலும், பள்ளிவாசல் காணி விடயங்களிலும் போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றினார். அதுபோன்றே மக்களுக்கு போலியான விளம்பரங்களை செய்தார்களே தவிர உருப்படியாக எதுவும் செய்தபாடில்லை. கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச சபையில் நடைபெற்ற சில்லறை விளையாட்டுக்களை மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள். மக்கள் இவர்களின் போலி முகங்கள் பற்றி தெளிவாக இருக்கிறார்கள்.

இம்முறை முஸ்லிங்களின் ஏகோபித்த தலைமையாக உருவெடுத்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் எம்.பி அவர்களின் கரங்களை பலப்படுத்தி எங்களின் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு இருக்கும் அதீத நம்பிக்கையின் காரணமாக அக்கரைப்பற்று பிரதேச சபையை மயில் அணியிடம் வழங்க மக்கள் முடிவெடுத்துள்ளார். இம்முறை மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை எங்கள் வசமாகும். நாங்கள் மக்கள் விரும்பும் ஆட்சியை முன்னெடுப்போம் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :