நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகர் உதுமாங்கண்டு நாபீர் பள்ளிவாசலுக்கு நிதியுதவி



பாறுக் ஷிஹான்-
சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நிதியினை பள்ளிவாசலின் நிருவாகத்தினரிடம் நேற்று (04) ஜும்ஆ தொழுகையின் பின்னர் நாபீர் பௌண்டேசன் தலைவர் அல்-ஹாஜ் கலாநிதி உதூமான்கண்டு நாபீர் வழங்கி வைக்கப்பட்டது.

நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் குறித்த நிதியுதவியை வழங்கி வைத்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை இவர் வழங்கி வைத்தார்.

அண்மையில் குறித்த பள்ளிவாசலுக்கு விஜயம் செய்திருந்த பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று அதற்கான உதவியை விரைவில் செய்வதாக வழங்கிய வாக்குறுதிக்கமைய இந்நிதியுதவிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

மேலும் சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :