“முகாவினர் செய்த சாதனைகள் ஒன்றுமில்லை. அதனால்தான் ஆதம்பாவா எம்பி தவறுதலாக சொன்ன சொல்லை அரசியல் ஆயுதமாக மாற்றச்செய்து, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள்,” எனக் கடுமையாக சாடியுள்ளார் யஹ்யாகான்.
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே மேற்படி கருத்துக்களை வெளியிட்டார்.
ஆதம்பாவா எம்பி - தவறுதலாக உச்சரித்த ஒரு சொல்லை உடனே திருத்திக் கொண்டார். அதை விட்டுவிட்டு , அவர் பேசும்போது ஏற்பட்ட பேச்சு தடுமாற்றத்தை தூக்கிப் பிடித்து மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.
“கொந்தராத்து என்ற போர்வையில் அரசு நிதியை பயன்படுத்தி பூரணப்படுத்தப்படாத வேலைகளை செய்து, தாங்களே அதிக இலாபம் தேடிக்கொண்டார்கள். மக்கள் இதனை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். உண்மையில், முகா தரப்பினருக்கு மக்களிடம் வாக்குச் கேட்க எந்த அருகதையும் இல்லை,” எனவும் அவர் சாடினார்.
அதேவேளை, “கல்முனையை சவூதி ஆக்குவேன், மருதமுனையை பஹ்ரைன் ஆக்குவேன், நற்பிட்டிமுனையை துபாய் ஆக்குவேன், சாய்ந்தமருதை குவைத் ஆக்குவேன் எனப் பெரியபெரிய வாக்குறுதிகள் அளித்த முகா, இன்று எந்த ஒன்றையும் நிறைவேற்றாத நிலையில், கண்டியிலிருந்து வந்து இத்தேர்தலிலும் தனது அரசியல் வியாபாரத்தை முன்னெடுக்க முனைகிறார். மக்கள் இதை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முடிவில், "உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முகாவை படுதோல்வியடையச் செய்து, மக்கள் தங்களது உணர்வை வெளிப்படுத்த வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்..
0 comments :
Post a Comment