அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கு கால்பந்து சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் கே.எல். சமீம் தலைமையிலான அணியின் தேர்தல் செயற்பாட்டு காரியாலயம் இன்று (05) இறக்காமத்தில் தலைமை வேட்பாளர் கே.எல். சமீம் அவர்களினால் வேட்பாளர்கள் புடைசூழ திறந்து வைக்கப்பட்டது.
காரியாலயம் திறப்பு விழாவை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தலைமை வேட்பாளர் கே.எல். சமீம், கால்பந்து சின்னத்திற்கு இறக்காமத்தின் 10 வாக்களிப்பு நிலையங்களிலும் 3000 வாக்குகள் பெற்று போனஸ் உட்பட 7 ஆசனங்கள் பெற "வட்டாரம் தாண்டிய" என்ற பற்றுறுதி அனைத்து வேட்பாளர்களாலும் இன்று வெளிப்பட்டது.
கால்பந்து சின்னத்தின் மத்திய தேர்தல் காரியாலயம் இன்று அனைத்து வேட்பாளார்கள் சகிதம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் மனதில் தோன்றிய ஆக்க பூர்வமான கருத்துக்களையும் முன் வைத்தனர் அவர்களின் ஆலோசனைகளையும் செயற்படுத்த உள்ளோம். மாற்றுக் கட்சிக்காரர் சபையைக் கைப்பற்றினால் நிதி பெற முடியாது என ஆளும் தரப்பினர் பிரச்சாரம் செய்கிறார்கள். இது பொய்.
ஒரு பிரதேச சபைக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் காலத்தின் காலம் அல்லது வருடா வருடம் ஒதுக்கப்படும் மாகாண கட்டுறுத்து நிதி (PSDG), அதைப்போலவே அலுவலக மற்றும் நிர்வாக விஸ்தரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய (CBG), இந்த இரண்டு நிதிகளும் தவிர இன்னும் பல வருமான மூலங்கள் உள்ளது. இறக்காமம் பிரதேச சபையில் புதிய வருமான வழிகளை நாங்கள் உருவாக்குவோம். மக்கள் போலிப்பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.
0 comments :
Post a Comment