கல்முனை மாநகர முன்னாள்பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கல்முனைக்கு விஜயம் செய்து உதவி திட்டங்களை வழங்கி வைத்தார் ..!



எம்.என்.எம்.அப்ராஸ்-
லங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹீம் உல் அசீஸ் கல்முனைக்கு நேற்று (19)விஜயம் செய்தார்.

முன்னாள் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள்,இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் (19) கல்முனையில் இடம்பெற்றது.

ரஹ்மத் மன்சூர் அவர்கள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உதவி திட்டங்களை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹீம் உல் அசீஸ் கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

மேலும் அதிதிகளான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிக இலங்கைக்கான ஆலோசகர் நுஃமான் ரஷீட் ஹயானி, சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ. எம்.ஜெளபர்,கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்ஸான்,மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.











எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :